விவேகானந்தரின் சிந்தனைகள்!
-------------------------------------------------------------------------------- *தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள். *எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். *எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம். --------------------------------------------------------------------------------
"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)." "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்." "பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!" "கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்." "உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி." "அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு." "மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்." "சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை." "நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன." "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்." "உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்." "உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன." --------------------------------------------------------------------------------
டில்லி அருகிலுள்ள ஆல்வார் என்ற பகுதியை மங்கள்சிங் என்ற மன்னர் ஆண்டு வந்தார். இவர் விவேகானந்தரை ஒருமுறை சந்தித்து, ""நீங்கள் விக்ரக வழிபாட்டை ஆதரிக்க காரணம் என்ன? அதில் என்ன விசேஷம் இருக்கிறது? ஏன்... விக்ரகம் இல்லாமலேயே கடவுளை மனதில் நினைக்க முடியாதா?'' என்றார் கேலியாக. சுவாமிஜி, மிகவும் அமைதியாக, ""மன்னா! உங்கள் படத்தை எடுத்து வரச் சொல்கிறீர்களா?'' என்றார். படம் வந்தது. அங்கு கூடியிருந்த சிலரை அழைத்து, ""இதோ! இந்த படத்தின் மீது துப்புங்கள்,'' என்றார் விவேகானந்தர். மன்னருக்கு கடும் கோபம். மன்னன் என்றும் பாராமல், ஒரு பிச்சைக்கார துறவி தன் படத்தின் மீது துப்பச் சொல்கிறானே என ஆத்திரப்பட்டார். கூடிநின்றவர்கள் அஞ்சி நின்றனர். யாரும் ஒரு அடியெடுத்து கூட வைக்கவில்லை. விவேகானந்தர் இப்போது சொன்னார். ""மன்னா! உங்கள் படத்தைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு மரியாதை. அதை அவர்கள் படமாக பார்ப்ப தில்லை. அதற்குள் உங்களையே பார்க்கிறார்கள். அதுபோல் தான் இறைவனும். அவனை உருவ மாகப் பார்த்தால் மனதில் மரி யாதை, பக்தி ஏற்படுகிறது. இதற்குத்தான் உருவ வழிபாடு புரிகிறதா?'' என்றார். மன்னர் முகத்தில் ஈயாட வில்லை. மன்னன் என்றும் பாராமல் அவருக்கும் புத்தி புகட்டிய விவேகானந்தரை, நாமெல்லாம் வீரத் துறவி என அழைப்பதன் காரணம் புரிகிறதா? --------------------------------------------------------------------------------
*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும். *அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும். *ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும். *அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது. *இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். *தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது. --------------------------------------------------------------------------------